திருப்பூர் மாநகராட்சியில் சேறு கலந்த குடிநீர் விநியோகம்
திருப்பூர் மாநகராட்சியில் சேறு கலந்த குடிநீர் விநியோகம் செய்வதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.;
திருப்பூர் மாநகராட்சி 11 வது வார்டுக்கு உட்பட்ட ஏபி நகரில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்து உள்ளன. இப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஏபி.,நகரில் உள்ள சத்யா வீதியில் சில வீடுகளுக்கு சேறு கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் கூறுகையில், மழை சீஸன் காரணமாக பொது மக்களுக்கு சளி, காய்ச்சல் தொந்தரவு அதிகம் உள்ளது. இதற்கிடையில் மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் சேறு கலந்து வருவதால், சளி, இருமல், தொண்டைவலி உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி சார்பில் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றனர்.