காதலியுடன் தகராறு: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தூக்கிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த வடுவூரை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் ஸ்டாலின்.19. டிப்ளமோ பட்டதாரியான இவர், கடந்த 10 நாட்களுக்கு முன் திருப்பூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று நண்பர்கள் வெளியில் சாப்பிட சென்ற நேரத்தில், தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வேலம்பாளையம் போலீஸார், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் விசாரணையில், காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.