கன மழை பாதிப்பு குறித்து மாநகராட்சியில் ஆலோசனை கூட்டம்

கன மழை பாதிப்பு குறித்தும், தடுப்பு நடவடிக்கை குறித்தும் மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது;

Update: 2021-11-07 11:54 GMT

திருப்பூர் மாநகராட்சியில் தடுப்பு நடவடிக்கை குறித்து கமிஷனர் கிராந்திகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருப்பூர் மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 4 ம் தேதி பெய்த பலத்த மழையால், வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்பு குறித்தும், தடுப்பு நடவடிக்கை குறித்தும் மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் கமிஷனர் கிராந்திகுமார்பாடி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி 2வது வார்டு கடந்த 4 ம் தேதி பெய்த பலத்த மழையால் 15 க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், அங்கிருந்த 50 க்கும் மேற்பட்ட பொது மக்கள் வெளியேற்றப்பட்டு, அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், நொய்யல்ஆற்றில் வழியாக வரும் குடிநீர் பைப் லைன் உடைந்தது. மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளும், உடைந்த பைப் லைன் சரி செய்ய உத்தரவிடப்பட்டது. மழையால் ஏற்பட்ட பாதிப்பு கணக்கெடுக்கவும், தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் செயற்பொறியாளர் மற்றும் நான்கு மண்டல உதவி ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News