திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை நிறுவனங்கள் ஸ்டிரைக்

திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் இன்று துவங்கியது.;

Update: 2022-01-17 12:27 GMT

விசைத்தறி.

திருப்பூர் சுற்று வட்டாரத்தில் பல ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. பின்னலாடை நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக பின்னலாடை நிறுவனத்திற்கு தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை உயர்ந்து வருகிறது. சமீபத்தில் 30 ரூபாய் உயர்ந்து 350 க்கு விற்கப்படுகிறது. நூல் விலை உயர்வால் பின்னலாடை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால் நூல் விலை குறையாமல் உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 2 நாள் பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தது.

அதன்படி, திருப்பூரில் உற்பத்தி நிறுத்த போராட்டம் இன்று துவங்கியது. இந்த போராட்டம் காரணமாக பின்னலாடை நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News