தமிழ்த்துறை சார்பில் போட்டிகள்: வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மொத்தம் ரூ. 66 லட்சம் பரிசு வழங்கப்பட்டது
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் பரிசு வழங்கி பாராட்டினார்.
திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ர் வினீத் தலைமை வகித்தார். செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், போட்டிகளில் வெற்றி பெற்ற பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ. 7 ஆயிரம், 3-வது பரி சாக ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 66 லட்சம் மதிப் புள்ள காசோலைகள் மற்றும் பாராட்டு வழங்கி பாராட்டினார்.
கவிதைப்போட்டகவிதை போட்டியில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி இளங்கலை கணினி அறிவியல் 2-ம் ஆண்டு மாணவி சத்தியபிரியா முதலிடத்தையும், அவினாசி அரசு கலைஅறிவியல் கல்லூரி இளங்கலை வணிக நிர்வாகவியல் 3-ம் ஆண்டு மாணவி அபாரணி 2-வது இடத்தையும், முத்தூர் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியில் இளங்கலை கணிதம் இரண்டாமாண்டு மாணவி சிவாத்தாள் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
கட்டுரைப் போட்டியில் திருப்பூர் எல். ஆர். ஜி. அரசு மகளிர் கல்லூரி இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி கீதாஸ்ரீ, திருமுருகன்பூண்டி ஏ. வி. பி. கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் கணினி பயன்பாடு படிக்கும் மாணவி முத்துலட்சுமி, திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி முதுகலை ஆங்கில இலக்கியம் முதலாமாண்டு மாணவி ஜெனிபர் ஜாஸ்மின் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை வென்றனர்.
பேச்சுப்போட்டியில் உடுமலை ஸ்ரீ ஜி. வி. ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் முதுகலை வரலாறு முதலாமாண்டு படிக்கும் மாணவி விஷ்ணுப்பிரியா முதல் பரிசும், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் கூட்டுறவு இரண்டாமாண்டு படிக்கும் மாணவி விஜி 2-வது பரிசும், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி இளங்கலை வேதியியல் மூன்றாம் ஆண்டு மாணவி பிருந்தா 3-வது பரிசும் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு, போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், துணை கமிஷனர் அபிஷேக் குப்தா, மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் இளங்கோ உள்ளிட்டவர் கள் கலந்து கொண்டனர்.