திருப்பூர் நிறுவனத்தில் 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
திருப்பூர் பிரிட்ஜ் வே காலனியில், நிறுவனத்தில் பணிபுரிந்த 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.;
திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில், குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்களா என வருவாய் துறை மற்றும் போலீஸார் சோதனை செய்தனர்.
திருப்பூர் லட்சுமி நகர் பிரட்ஜ்வே காலனி விரிவு பகுதியில், கொல்கத்தாவை சேர்ந்தவர் ஒருவர், தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 14 வயக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுவதாக, சைல்டு லைனுக்கு புகார் சென்றது.
அதன்பேரில், தொழிலக பாதுகாப்பு துறை மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் சென்று சோதனை செய்தனர். மேற்கு வங்காளத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட 19 தொழிலாளர்களில், 6 பேர் சிறுவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணி நடக்கிறது. இதற்கிடையில், வடக்கு தாசில்தார் ஜெகநாதன் மற்றும் போலீஸார், அங்கு கூட்டாய்வு செய்தனர்.