திருப்பூரில் டிச.,15ம் தேதி வரை தொழில் கடன் சிறப்பு முகாம்

திருப்பூரில் தொழில் கடன் வழங்கும் முகாம் டிச.,15 ம் தேதி வரை நடக்கிறது.;

Update: 2021-12-09 15:08 GMT

கலெக்டர் வீனித்.

இதுகுறித்து கலெக்டர் வீனித் தெரிவித்து உள்ளதாவது:

தொழில் முதலீட்டு கழக திருப்பூர் மாவட்ட கிளை அலுவலகத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சிறப்பு திட்டங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியம், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்ற விரிவான சேவை அளிக்கப்படும். தகுதியான தொழில்களுக்கு 25 சதவீதம் முதலீட்டு மானியமாக ரூ.1.50 கோடி வரை வழங்கப்படும். சிறப்பு முகாமில் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படுகிறது. நீட்ஸ் திட்டத்தில் ஆய்வு கட்டணத்தில் 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படும். அரிய வாய்ப்பை பயன்படுத்தி புதிய தொழில் முனைவோர் தொழில் திட்டங்களுடன் வந்து தொழிற்கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய கடன் திட்ட சேவையை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News