பிளாஸ்டிக் பாட்டில் சேகரிக்க பாட்டில் வடிவ குப்பைத்தொட்டி வைப்பு

திருப்பூர் மாநகரில், பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்க பாட்டில் வடிவ குப்பைத்தொட்டி வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-10-18 12:49 GMT

திருப்பூரில், பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க வைக்கப்பட்டுள்ள, பாட்டில் வடிவ குப்பைத்தொட்டி.

தீபாவளி பண்டிகை நெருங்கியதை தொடர்ந்து, திருப்பூர் மாநகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.  கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கடை வீதிகளுக்கு வரும் மக்கள்,  தண்ணீர் பாட்டில், குளிர்பான பாட்டில்களை ஆங்காங்கே வீசி விட்டு செல்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

குறிப்பாக,  மழை காலத்தில், சாக்கடைகளை பிளாஸ்டிக் பாட்டில்கள் அடைத்து விடுவதால், தண்ணீர் செல்ல வழியின்றி, வெளியேறுகிறது. இவற்றை தவிர்க்கும் வகையில், திருப்பூர் மாநகராட்சி சார்பில், பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க, பாட்டில் வடிவம் உள்ள குப்பைத்தொட்டிகளை வைக்க,  மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார்பாடி உத்தரவிட்டார். அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பாட்டில் வடிவ குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News