திருப்பூரில் கொள்ளை அடிப்பதற்காக பதுங்கிய 5 பேர் கைது

திருப்பூரில் கொள்ளை அடிப்பதற்காக பதுங்கி இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-01-03 11:05 GMT

திருப்பூர்,  ஊத்துக்குளி ரோடு ரயில்வே தண்டவாளம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக திருப்பூர் வடக்கு போலீஸாருக்கு தகவல் கிடைந்தது. சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்றபோது, அந்த கும்பல் தப்பி ஓட முயற்சித்தது.

ஆனால், போலீஸார் அனைவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில், யாசர், ஹராபத் அருண்குமார் மற்றும் 18 வயதுள்ள சிறுவர்கள் 3 பேர் என,  மொத்தம் 5 பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து பட்டக்கத்தி, மிளகாய் தூள் போன்றவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News