திருப்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்குசேகரிப்பு

திருப்பூரில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.;

Update: 2022-02-14 13:04 GMT

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் அமைந்துள்ளன. இதில், பாஜக. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களை ஆதரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 8 முனைப்போட்டி நிலவுகிறது. அதில், 3 கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. தங்கள் வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் தகுதியான நபரா என பார்த்து வாக்களிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் ஊழல் இல்லாமல் மக்களுக்கு நேரடியாக வந்து சேர வேண்டும் என்பதற்காக தான் பாஜக., தனித்து போட்டியிடுகிறது.

30 சதவீத கமிஷன் என்ற முறையை மாற்றி அமைக்கவே பாஜக., தனித்து நிற்கிறது. மத்திய அரசின் 8 ஆண்டு ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், திமுக.வின் 8 மாத ஆட்சி மீது,  மக்களிடம் சலிப்பு ஏற்பட்டு உள்ளது. திமுக., ஆட்சியில் பொங்கல் தொகுப்புவழங்கியதில் இருந்து ஊழல் நடந்து உள்ளது, என்று அண்ணாமலை பேசினார்.

Tags:    

Similar News