திருப்பூரில் கால்முறிவுடன் வந்து ஜனநாயகக் கடமையாற்றிய இளைஞர்
திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் கால்முறிவு ஏற்பட்ட இளைஞர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தார்.;
கால்முறிவு ஏற்பட்ட இளைஞர் ஆம்புலன்சில் வந்து திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் ஓட்டுப்போட்டார்.
திருப்பூர் மாநகராட்சிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. காலை முதலே பொது மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவிட்டு சென்றனர்.
இந்நிலையில், திருப்பூர் பத்மாவதிபுரத்தை சேர்ந்தவர் மதனகோபால் மகன் ஜானகிராமன்,20. இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் சாலை விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜனநாயக கடமை ஆற்ற விரும்பி அவர், ஆம்புலன்ஸில் வந்து மும்மூர்த்தி நகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.