திருப்பூரில் இளைஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது

திருப்பூரில் இளைஞர் கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2022-02-15 15:21 GMT

பைல் படம்.

திருப்பூரில் செரங்காடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரஞ்சித் என்ற வாலிபர் ரத்த காயங்களுடன் ஓடி வந்தார். இது குறித்து போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

தனது நண்பரை பிடித்து வைத்து உள்ளதாக ரஞ்சித் கொடுத்த தகவலில் பேரில், அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பார்த்தபோது, சதீஷ் என்ற வாலிபரின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார். இது குறித்து 4 தனிப்படை போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், சதீஷ்குமாரின் தலை எம்எஸ் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த ராம்குமார்,25, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுபாபிரகாஷ்,23, மதுரை சேர்ந்த மணிகண்டன்,25, திருப்பூர் கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்,24 ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்புஇருக்கிறதா என்பது போலீஸார் விசாரிப்பதாக மாநகர காவல் ஆணையாளர் பாபு தெரிவித்தார்.

Tags:    

Similar News