மகாகாளியம்மன் கோவில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது
மகாகாளியம்மன் கோவில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
அமராவதிபாளையத்தில் கோவிலில் வெள்ளி கவசங்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அமாராவதிபாளையத்தில் மகாகாளியம்மன் கோவிலில் உள்ளது. இக்கோவில் பூசாரியாக மணிராஜ் உள்ளார். இக்கோவிலில் , கடந்த 3 ம் தேதி கோவில் கதவு உடைக்கப்பட்டு, கோவிலில் இருந்த உற்சவர் விநாயகர் கிரீடம் 1.5 கிலோ, மகாகாளியம்மன் கீரிடம் அரை கிலோ மற்றும் முருகன் சிலை வெள்ளி கவசம் 1 கிலோ, விநாயகர் வெள்ளி கவசம் 3 கிலோ என மொத்தம் 6 கிலோ வெள்ளி, 3 கிராம் தங்கம் ஆகியவை திருடுப்போனது. இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பூர் ஊரக போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த திருட்டு தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியை சேர்ந்த தேவேந்திரன், விருமாண்டி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த வெள்ளிப்பொருட்கள், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.