திருப்பூர் மாவட்டத்தில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

ஒன்பது சிறுவர்கள் உள்பட 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-14 13:30 GMT

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவ துவங்கி உள்ளது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் டெங்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் வீரப்பாண்டி எம்ஜிஆர் நகர், செல்லம் நகர், சாமுண்டிபுரம், அவிநாசி என. நாடார்புரம், அனுப்பர்பாளையம், சிட்கோ, அங்கேரிபாளையம் ஆகிய பகுதிகளில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 10 வயதுக்குட்பட்ட 9 சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. மேலும், திருப்பூரை சேர்ந்த 35 வயது பெண், 48 வயது ஆண் என 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. டெங்கு பாதிக்கப்பட்ட அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News