700 கிலோ புகையிலை குட்கா பறிமுதல். இருவர்கைது.

திருப்பூரில் தடைசெய்யப்பட்ட 700 கிலோ புகையிலை குட்கா பொருட்கள் பறிமுதல். வடமாநில சகோதரர்கள் கைது.

Update: 2021-03-11 17:50 GMT

திருப்பூர் பாண்டியன் நகரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருமுருகன் பூண்டி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து ஆய்வாளர் கந்தசாமி தலைமையிலான போலீசார் பாண்டியன் நகரில் உள்ள துர்கா பேன்சி என்ற கடையில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து கடையின் உரிமையாளர் நாட்டேராம்(26) என்பவரை பிடித்து விசாரித்ததில் இவரும் இவரது சகோதரர் பிகாராம்(30) என்பவரும் சேர்ந்து கல்லம்பாளையம் பகுதியில் பாக்குமட்டை சேகரிக்க குடோன் தேவை என பெரிய குடோனை வாடகைக்கு எடுத்து அதில் புகையிலை குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, சகோதரர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News