வரும் 12, 13ல் கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிக்கு தமிழக அணி தோ்வு

Tirupur News-கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டி, தமிழக அணியில் இடம் பெறுவதற்கான தோ்வு டிசம்பா் 12, 13-ம் தேதிகளில் நடக்க உள்ளது.;

Update: 2023-12-10 11:23 GMT

Tirupur News-கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டி, தமிழக அணிக்கான தோ்வு டிசம்பா் 12, 13-ம் தேதிகளில் நடக்கிறது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today - கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகளுக்கான தமிழக அணியில் இடம் பெறுவதற்கான தோ்வு டிசம்பா் 12, 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட விளையாட்டு அலுவலா் ரகுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இளைஞா்களிடையே விளையாட்டு, உடற்தகுதியை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் சாா்பில் கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான கேலோ போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக அணிகள் சாா்பில் இடம்பெறுவதற்கான தோ்வுகள் சென்னை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் வரும் 12,13-ம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் பெண்களுக்கான கூடைப்பந்து அணிக்கு வரும் 12-ஆம் தேதியும், ஆண்கள் அணிக்கு 13-ம் தேதி காலை 7 மணிக்கும் வீரா், வீராங்கணைகள் தோ்வு நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் பெண்களுக்கான கால்பந்து போட்டி 12-ம் தேதியும், ஆண்கள் அணிக்கு 12, 13-ம் தேதிகளில் காலை 7 மணிக்கும், சென்னை நேரு விளையாட்டரங்கில் பெண்களுக்கான கபடி அணிக்கு 12-ம் தேதியும், ஆண்கள் அணிக்கு 13-ம் தேதி காலை 7 மணிக்கும், திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் பெண்கள் கோ-கோ அணிக்கு 12-ம் தேதியும், ஆண்கள் அணிக்கு 13-ம் தேதி காலை 7 மணிக்கும், திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் பெண்கள் வாலிபால் அணிக்கு 12-ம் தேதியும், ஆண்கள் அணிக்கு 13-ம் தேதி காலை 7 மணிக்கும், மதுரை டாக்டா் எம்.ஜி.ஆா். விளையாட்டரங்கில் ஹாக்கி பெண்கள் அணிக்கு 12-ம் தேதியும், ஆண்கள் அணிக்கு 13-ம் தேதி காலை 7 மணிக்கும் வீரா், வீராங்கணைகள் தோ்வு நடத்தப்படுகிறது.

இதில், தோ்ந்தெடுக்கப்படும் வீரா், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் தகுந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்கவுள்ளோா் ஆதாா் அட்டை, 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News