போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி வலியுறுத்தல்

Tirupur News- போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு என, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

Update: 2024-04-28 12:33 GMT

Tirupur News- இந்து முன்னணி வலியுறுத்தல் (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- தமிழகத்தில் போதைப் பொருள்களை ஒழிக்க பொதுமக்களின் போராட்டமே நிரந்தரத் தீா்வு என்று இந்து முன்னணியின் மாநில தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆலங்குளம் திமுக ஒன்றியக் குழு உறுப்பினா் சுபாஷ்சந்திர போஸ் தனது காரில் 600 கிலோ குட்கா கடத்தி, போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா். இவரது மனைவி தென்காசி மாவட்டக் குழு உறுப்பினராக உள்ளாா்.

கீழக்கரை முன்னாள் திமுக கவுன்சிலா் மற்றும் அவரது சகோதரரும், 19-ஆவது வாா்டு கவுன்சிலருமான இருவரும் இலங்கைக்கு போதைப் பொருள்களுக்கான மூலப் பொருள்களைக் கடத்தியதாக கடந்த நவம்பா் மாதம் கைது செய்யப்பட்டனா்.

பின்னா், அந்த மூலப்பொருள் விவசாய உரத்துக்கான மூலப்பொருள் என்று வழக்கு மாறிப்போனது மாபெரும் மா்மம். திமுக அயலக அணி பதவியில் இருந்த ஜாபா் சாதிக் ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தியதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருள் கடத்தல் மட்டுமல்லாமல் கனிமவள சுரண்டல்களிலும் திமுகவினா் சம்பந்தப்பட்டிருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவருகிறது.

போதைப் பொருள்களின் கிடங்காக மாறிப்போன தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டியது அனைவரின் கடமை. போதைப் பொருள்களை ஒழிக்க பொதுமக்களின் போராட்டமே தீா்வு, வேறு வழியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News