தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும்; அமைச்சர் மு.பெ சாமிநாதன் நம்பிக்கை

Tirupur News,Tirupur News Today- தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும் என, பல்லடத்தில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.;

Update: 2023-08-20 06:40 GMT

Tirupur News,Tirupur News Today- காவிரி தண்ணீர், தமிழகத்துக்கு கண்டிப்பாக கிடைக்கும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது, காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து, கர்நாடக அரசியல்வாதி ஒருவர் பேசியது அவரது சொந்த கருத்து. அவர்களுடைய மாநிலத்தில் விவசாயிகளின் ஆதரவை பெறுவதற்காக காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் இரு மாநில அரசுகளும் பேசி பயனில்லாததால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. பின்னர் நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இடையிடையே அவ்வப்போது அரசியல் பிரச்சினைகள் இருந்தாலும்,முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுத்து டெல்டா பகுதிகளில் பயிர்கள் பாதிக்காத வண்ணம் தண்ணீர் கிடைப்பதற்கு வழி வகை செய்வார். நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும். அதற்கான சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு 

திருப்பூர் மாநகராட்சி பகுதியில், மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.344.36 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் திட்டப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.45.25 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் மேம்பாலப்பணிகளை, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது,

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகரில் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.250 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கதொட்டி, சினேகா நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.31 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் புதிய பஸ் ஸ்டாண்ட், டவுன்ஹாலில் ரூ.54.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநாட்டு அரங்கம் என மொத்தம் ரூ.389.61 கோடி மதிப்பீட்டில் நடந்துவரும் திட்டப்பணிகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டன, என்றார்.

இதில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் , துணை ஆணையர் பாலகிருஷ்ணன்,மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் கண்ணன், வாசு, திருப்பூர் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் பத்மநாபன், கோவிந்தராஜ் மற்றும் தொடர்புடைய அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News