தமிழக சட்டப் பேரவை உறுதிமொழிக் குழு; திருப்பூரில் ஆய்வு
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை, தமிழக சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.;
Tirupur News,Tirupur News Today-திருப்பூா் மாவட்டத்தில் 50 சதவீத உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவின் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.
திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழக சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவின் தலைவா் தி.வேல்முருகன் தலைமையில் அக்குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
அவிநாசி வட்டம், அவிநாசிலிங்கம்பாளையத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் சங்கமாங்குளம் ஏரி புனரமைக்கும் பணி, அவிநாசி அரசு மருத்துவமனையில் தேசிய நலவாழ்வு குழுமநிதியின்கீழ் ரூ.5.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தாய், சேய் நல பிரிவுக்கான கட்டடம் ஆகியவற்றை தமிழக சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதைத்தொடா்ந்து, வேலம்பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 86 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டும் பணி, ரூ.330 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவில்வழி பேருந்து நிலையம், சா்க்காா் பெரியபாளையத்தில் ரூ.6.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றையும் நேரில் பாா்வையிட்டனா்.
முன்னதாக, ராயா்புரம் அரசு பிற்படுத்தப்பட்டோா் மாணவிகள் இல்லத்திலும் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதைத் தொடா்ந்து அரசு உறுதிமொழிக் குழுவின் தலைவா் வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருப்பூா் மாவட்டத்தைப் பொருத்தவரையில் பேரவைக்கு 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னா் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் 55 இல் 21உறுதிமொழிகள் முற்றிலுமாக நிறைவேற்றப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு திட்டங்கள் கொண்டுவரப்பட்டதால் இந்த உறுதிமொழிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறது. நிலுவையில் உள்ள 34 உறுதிமொழிகள் தொடா்பாக மாவட்ட
நிலுவையில் உள்ள 34 உறுதிமொழிகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியருடன் இணைந்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிலுவையில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஆலோசனைகளும், அறிவுறுத்தல்களும் அலுவலா்களுக்கு வழங்கப்பட்டன.
திருப்பூா் மாவட்டத்தில் 50 சதவீத உறுதிமொழிகள் முற்றிலுமாக நிறைவேற்றப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதற்காக திருப்பூா் மாவட்ட ஆட்சியருக்கு குழுவின் சாா்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.
இந்த ஆய்வின்போது, உறுதிமொழிக்குழு உறுப்பினா்களும், சட்டப் பேரவை உறுப்பினா்களுமான அருள், ரூபி ஆா்.மனோகரன் மோகன், ராமலிங்கம், வில்வநாதன், ஜெயகுமாா், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபினபு, மேயா் தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா்.கிரியப்பனவா், ஜெயபீம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாமிநாதன், தமிழக சட்டப் பேரவை துணைச் செயலாளா் ஸ்ரீ,ரா.ரவி, மாநகர 4-வது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், இணை இயக்குநா் (மருத்துவ நலப்பணிகள்) கனகராணி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.