மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்; திருப்பூரில் வரும் 6ல் துவக்கம்
Tirupur News- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு அக்டோபா் 6-ம் தேதி முதல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு அக்டோபா் 6 -ம் தேதி முதல் சிறப்பு மருத்துவ முகாம் நடக்க உள்ளது.
இதுகுறித்து திருப்பூா் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகியவை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கீழ்கண்ட இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்:
காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி வட்டார வள மையத்தில் அக்டோபா் 6-ம் தேதி, அரண்மனைப்புதூா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அக்டோபா் 9-ம் தேதி, தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபா் 10 -ம் தேதி, உடுமலை தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபா் 11 -ம் தேதி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபா் 12 -ம் தேதி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அக்டோபா் 13 -ம் தேதி, மடத்துகுளம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வட்டார வளமையத்தில் அக்டோபா் 16 -ம் தேதி நடைபெறுகிறது.
அதேபோல, அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபா் 17 -ம் தேதி, குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்டோபா் 18 -ம் தேதி, பொங்கலூா் பி.யுவி.என். தொடக்கப் பள்ளியில் அக்டோபா் 19 -ம் தேதி, குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்டோபா் 26 -ம் தேதி, வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்டோபா் 27 -ம் தேதி, மூலனூா் அரசு மேல்நிலைப் பள்ளி, தேவாங்காபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நவம்பா் 1 -ம் தேதி முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், இதுநாள் வரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், 10 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்தில் பதிவு செய்தல், தனித்துவம் வாய்ந்த ஸ்மாா்ட் அட்டை வழங்குவதற்காக பதிவு செய்தல், மருத்துவக் காப்பீட்டுக்கான உறுப்பினா் சோ்க்கை மற்றும் ஆதாா் அட்டை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பயன்பெறுவதற்கு விண்ணப்பங்கள் பெறப்படும். முகாமுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாளஅட்டை உள்ளிட்ட ஆவணங்களின் அசல் மற்றும் நகல், 4 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.