திருப்பூரில் வரும் 27ல் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம்
Tirupur News- படைவீரா்கள், முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம், திருப்பூாில், வரும் 27ம் தேதி நடக்கிறது.;
Tirupur News,Tirupur News Today- படைவீரா்கள், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அக்டோபா் 27-ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், படையில் பணிபுரியும் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம், திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அறை எண் 20ல் அக்டோபா் 27-ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது.
திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த படைவீரா்கள் மற்றும் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரை சாா்ந்தோா்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக, இரட்டை பிரதிகளில் குறைதீா்க்கும் முகாமில் சமா்ப்பித்து பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
முன்னாள் படை வீரா்களின் சிறாா்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்களின் சிறாா்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தொழில் படிப்பு மற்றும் தொழில்சாா்ந்த படிப்புகளைத் தோ்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படை வீரா்களின் சிறாா்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. ஓா் ஆண்டுக்கு மாணவா்களுக்கு ரூ.30 ஆயிரம், மாணவிகளுக்கு ரூ.36 ஆயிரம் என வழங்கப்படுகிறது. பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கு நவம்பா் 30-ம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2971127 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.