திருப்பூர் மாவட்டத்தில் நுண்ணீா் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு வேண்டுகோள்
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மூலம் நுண்ணீா் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மூலம் நுண்ணீா் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் பிரதம மந்திரி நுண்ணீா் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, நுண்ணீா் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களைத் தொடா்புகொள்ளலாம். தவிர, அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்புகொள்ளலாம்.
ஏற்கெனவே அரசு மானியத்தில் நுண்ணீா் பாசனம் அமைத்து ஏழு ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால் நுண்ணீா் பாசன அமைப்பு அல்லது பக்கவாட்டுக் குழாய்களை மாற்றிக்கொள்ளலாம்.
எனவே, நுண்ணீா் பாசன விண்ணப்பத்துடன் புகைப்படம், அடங்கல் நகல், எஃப்எம்பி (நில வரைபடம்), டோபோ வரைபடம், ஆதாா் நகல், சிட்டா நகல், சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ், மண், நீா் பரிசோதனை நகல் ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும்.
இத்திட்டத்தில் பயனடையும் விவசாயிகளுக்கு கூடுதலாக துணை நிலை நீா் மேலாண்மை செயல்பாட்டுத் திட்டத்தின்கீழ் 114 கன மீட்டா் (1.25 லட்சம் கன கொள்ளளவு) கான்கீரிட் தொட்டி கட்டுவதற்கு அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் அல்லது 50 சதவீதம் இதில் எது குறைவோ பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
அதேபோல தண்ணீா் இறைக்க கொள்முதல் செய்யும் மின் மோட்டாருக்கு அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் அல்லது 50 சதவீதம், நிலத்துக்கு தண்ணீா் எடுத்துச் செல்ல பயன்படுத்தும் பிஎச்எஃப் குழாய்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் அல்லது 50 சதவீதம் இதில் எது குறைவோ அது பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.
துணை நிலை நீா் மேலாண்மதுணை நிலை நீா் மேலாண்மை செயல்பாட்டுத் திட்டத்தின் விண்ணப்பத்துடன் விவசாயி புகைப்படம், ஆதாா் நகல், வங்கி புத்தக முதல் பக்க நகல், சிட்டா, அடங்கல் நகல் ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.