திருப்பூர்; பள்ளிகளில் ஓவியம், உடற்கல்வி, இசை ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

Tirupur News- பள்ளிகளில் மாணவர் மன அழுத்தங்களை போக்க ஓவியம், உடற்கல்வி, இசை ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.;

Update: 2023-12-08 14:28 GMT

Tirupur News- ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- தேசிய ஆசிரியர் சங்க திருப்பூர் மாவட்ட செய்தி தொடர்பு செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் பொருளாதார பாட ஆசிரியர் கடற்கரை என்பவரை, பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இருவர் அரிவாளால் வெட்டி காயப்படுத்தி உள்ளனர். சமீப காலமாக மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்து வருவது வேதனைக்குரியது.

இது ஆசிரியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் என்பதோடு மட்டுமின்றி, மாணவர்களின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கிவிடும்.ஒரு நாளில் எட்டு பாட வேலைகளிலும் பாடங்களை மட்டுமே கற்பிப்பதால் மாணவர்களிடையே சோர்வு ஏற்படுகிறது. இதனால் ஓவியம், உடற்கல்வி, இசை உட்பட பிற திறமைகளையும் ஊக்குவித்து பயிற்றுவிக்க வேண்டும்.

இது மாணவர்களிடையே மன அழுத்தம் குறைந்து, அவர்களை உற்சாகப்படுத்தும். இந்த பாடப்பிரிவுகள் இருந்தாலும் தகுதியான ஆசிரியர்கள் இல்லை. ஆகவே, இந்த பாடங்களுக்கும் ஆசிரியர்களை நியமித்து கற்பிக்க வேண்டும். மாதம் ஒருமுறை மன ஆலோசகர்கள் வாயிலாக மனநல ஆலோசனையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News