திருப்பூர்; பயிர் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில், பயிர் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.;
Tirupur News,Tirupur News Today- தமிழக விவசாயிகள் தற்போது பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் ராபி கால நெல் பயிருக்கு காப்பீடு செய்ய, அவகாசம் முடிந்த நிலையில் பெரும்பாலான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யவில்லை. எனவே பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை இணை செயலாளருக்கு, தமிழக வேளாண்துறை கமிஷனர் கடிதம் அனுப்பினார்.
இதை ஏற்று, மத்திய அரசு பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை வருகிற 22-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளதால் திருப்பூர் மாவட்டத்தில் நெல் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், செயல்படும் பொது சேவை மையங்களில் நெல் பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம்.
இந்த தகவலை திருப்பூர் வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.