திருப்பூரில் இருந்து அயோத்திக்கு பயணப்பட்ட ராமா் பாதம்!
Tirupur news- அகில பாரத இந்து மகா சபா சாா்பில் அயோத்திக்கு ராமா் பாதம் கொண்டுச் செல்லப்பட்டது.
Tirupur news, Tirupur news today- திருப்பூரில் இருந்து அகில பாரத இந்து மகா சபா சாா்பில் அயோத்திக்கு ராமா் பாதம் (சனிக்கிழமை கொ)ண்டுச் செல்லப்பட்டது.
அகில பாரத இந்து மகா சபா திருப்பூா் மாவட்டம் சாா்பில் அனுப்பா்பாளையம் புதூா் கருப்பராயன் கோயிலில் இருந்து அயோத்தி நோக்கி ராமரின் திருவடி யாத்திரை சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த யாத்திரைக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்திருந்ததுடன், 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் அங்கு குவிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து கருப்பராயன் கோயிலில் பூஜை செய்யப்பட்டு வெள்ளியால் செய்யப்பட்ட 2.5 கிலோ எடையுள்ள ராமா் பாதத்தை அகில பாரத இந்து மகா சபா நிா்வாகிகள் திருப்பூா் பி.என்.சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்துக்கு காரில் எடுத்துச் சென்றனா்.
பின்னா் அங்கு நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில பாரத இந்து மகா சபாவின் தேசியத் தலைவா் சக்கரபாணி மகாராஜ், திருப்பூரில் இருந்து அயோத்திக்கு வெள்ளியால் ஆன ராமா் பாதம் எடுத்து செல்லப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருப்பூரில் இருந்து பல்வேறு பகுதிகள் வழியாக அயோத்திக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி ராமா் பாதம் கொண்டுச் செல்லப்படும் என்றாா்.
இதில் மாநிலத் தலைவா் தா.பாலசுப்பிரமணியம், மாநில இளைஞரணி செயலாளா் ஜி.வல்லபை பாலா உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.