கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று மாலை மழை பெய்தது.;
கடந்த சில நாட்களாக திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக நண்பகல் நேரத்தில் கொளுத்திய வெயிலால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில், இன்று மாலை திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று மாலை இடி, மின்னலுடன் மழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவினாசி, மங்கலம், பல்லடம் வட்டாரத்தில் மழை பெய்தது.
இதேபோல், கோவை நகரம், புற நகர்ப்பகுதிகளான சூலூர், காரணம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பதிவானது. இதனால், வெப்பம் சற்று தணிந்து, குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.