பல்லடம் -உடுமலை வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க பொது மக்கள் கோரிக்கை
Tirupur News- பல்லடம் -உடுமலை வழித்தடத்தில், கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
Tirupur News,Tirupur News Today- பல்லடம் -உடுமலை வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல்லடம் - உடுமலை வழித்தடத்தில், பல்லடம் நகரம் மற்றும் 50-க்கும் அதிகமான கிராமங்கள் அமைந்துள்ளன. நூற்பாலைகள், பனியன் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு, இங்குள்ள கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பூா், பல்லடத்துக்கு வந்து செல்கின்றனா். இந்த வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்கு நகரப் பஸ்கள் வசதியும் குறைவாகவே உள்ளது. இடைபட்ட பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு செல்லும் மாணவா்கள் பஸ்களில் நின்று கொண்டு பயணிக்க வேண்டியுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடமாக இருப்பதால் பல்லடம் - உடுமலை சாலை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயா்த்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், போதுமான அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. பொதுமக்களின் தொடா் கோரிக்கை அடிப்படையில் உடுமலையில் இருந்து பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்கள் மட்டும் திருப்பூருக்கு இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்கள் உடுமலை பஸ் ஸ்டாண்ட், குடிமங்கலம், ஜல்லிபட்டி, பல்லடம் பஸ் ஸ்டாண்ட் ஆகிய நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தப்படுகின்றன. இதனால் உடுமலை - திருப்பூா் செல்பவா்கள் பயன் அடைந்தாலும், பல்லடம் வழித்தட கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு போதிய பஸ் போக்குவரத்து வசதி கிடைப்பதில்லை.
எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் பல்லடம் செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். எனவே பல்லடம் - உடுமலை வழித்தடத்தில் கூடுதல் பஸ் கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாவிபாளையம் பகுதி பொதுமக்கள், மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.