திருப்பூர்; சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள்
Tirupur News- பிரதோஷ தினமான நேற்று வெள்ளக்கோவில் உள்பட திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன.
Tirupur News,Tirupur News Today-வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றன.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் தெய்வநாயகி உடனமா் சோழீஸ்வர சுவாமி கோவில், வள்ளியிரச்சல் சிவன் கோவில், மயில்ரங்கம் தையல்நாயகி உடனமா் வைத்தியநாதேஸ்வரா் கோவில், கண்ணபுரம் வித்தகச் செல்வி சமேத விக்ரம சோழீஸ்வரா், லக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வரா், உத்தமபாளையம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா், முத்தூா் சோழீஸ்வரா், மங்கலப்பட்டி பாண்டீஸ்வரா் ஆகிய கோவில்களில் புதன்கிழமை காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில், கோவில்களில் உள்ள சிவபெருமானுக்கும், நந்திக்கும் தேன், பஞ்சாமிா்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், மலா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
திருப்பூர்; திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில், அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருப்பூர் ஊத்துக்குளி ரோடு சுக்ரீஸ்வரர் கோவில், நல்லூர் ஈஸ்வரன் கோவில், பெருமாநல்லூரில் உள்ள உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பல்லடம் அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி கோவில், பல்லடம் சித்தம்பலம் நவகிரக கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் ஆலயங்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
கோவில்களில் சிவ பெருமானுக்கும், நந்திக்கும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துக்கொண்டு சிவ பெருமானை வழிபட்டனர்.