திருப்பூர், பல்லடத்தில் நாளை மின்தடை
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மற்றும் பல்லடத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக, நாளை மின்விநியோகம் தடை செய்யப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில், நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
திருப்பூரில் குமார் நகர், சந்தைப்பேட்டை, கலெக்டர் ஆபீஸ், அருள்புரம் துணை மின்நிலையங்களில், நாளை ( 19ம் தேதி) சனிக்கிழமை, மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதற்காக, காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுவதாக, மின்வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குமார் நகர் துணை மின்நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரை
ராமமூர்த்தி நகர், பி என் ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈஆர்பி நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், திருநீலகண்டபுரம், எஸ்வி காலனி, பண்டித் நகர், கொங்கு மெயின் ரோடு, வஉசி நகர், டிஎஸ்ஆர் லே அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்ஆர்கே புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்எஸ் நகர், புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் லட்சுமி நகர் பகுதிகள்.
சந்தைப்பேட்டை துணை மின்நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரை
அரண்மனைப்புதூர், தட்டான் தோட்டம், எம்ஜி புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, செரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கேஎம் நகர், கேஎம்ஜி நகர், பட்டுக்கோட்டையார் நகர், திருவிக நகர், கவுண்டம்பாளையம், கோபால் நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏபிடி நகர், கேவிஆர் நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷன் வீதி, காமராஜர் ரோடு, புது மார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, காதர் பேட்டை, செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், சந்திராபுரம் மெயின், புதூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகள்.
கலெக்டர் ஆபீஸ் துணை மின்நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரை
பூம்புகார் நகர், இந்திரா நகர், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதிநகர், குளத்துப்பாளையம், செல்வலட்சுமி நகர், வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கவுண்டம்பாளையம், கேஆர்ஆர் தோட்டம் பகுதிகள்.
அருள்புரம் துணை மின்நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரை
அருள்புரம், தண்ணீர் பந்தல், உப்பிலிபாளையம், அண்ணா நகர், செந்தூரன் காலனி, லட்சுமி நகர், குங்குமபாளையம், சேடர்பாளையம் ரோடு, தியானலிங்கா ரைஸ் மில் ரோடு, செட்டி தோட்டம், சின்னக்கரை தர்க்கா, குன்னாங்கல்பாளையம் பிரிவு, சென்னிமலைப்பாளையம், கேஎன்எஸ் கார்டன், குன்னாங்கல்பாளையம், கணபதிபாளையம், சவுடேஸ்வரி நகர், கிரீன் பார்க், ராயல் அவென்யூ, பிஏபி குடியிருப்பு, சிரபுஞ்சி நகர், ஓம் சக்தி நகர், கங்கா நகர், பச்சாங்காட்டுப்பாளையம், எஸ்ஆர்சி நகர், எஸ்எம்சி நகர், பாலாஜி நகர், திருமலை நகர், சரஸ்வதி நகர், சிந்து கார்டன், ஸ்ரீனிவாசா நகர், அல்லாளபுரம், அக்கணம்பாளையம், வடுகபாளையம், அகிலாண்டபுரம், குப்புச்சிபாளையம், காளிநாதம்பாளையம், பொன்நகர், அவரப்பாளையம், நொச்சிபாளையம், அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது, என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்லடம் துணை மின்நிலையம்
பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறியிருப்பதாவது,
பல்லடம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடப்பதால், கீழ்கண்ட பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகர், அம்மாபாளையம், பனப்பாளையம் ஆகிய ஊர்களில் மின் வினியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.