திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 11ம் தேதி மின்தடை
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் முதலிபாளையம், நல்லூர், பலவஞ்சிபாளையம் மற்றும் அலகுமலை துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி நடப்பதால், வரும் 11ம் தேதி, மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில், நாளை மறுதினம் 11ம் தேதி மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, முதலிபாளையம், பலவஞ்சிபாளையம், நல்லூர், அலகுமலை ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 11-ம்தேதி, செவ்வாய்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இந்த துணை மின்நிலையங்களில் மின்சார விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
முதலிபாளையம் துணை மின்நிலையம்; மின்தடை பகுதிகள்- காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை
சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன்நகர், ஆர். வி. இ. நகர், கூலிப்பாளையம், காசிபாளையம், சர்க்கார் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரெங்காகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானூர், செவந்தாம்பாளையம்.
நல்லூர் துணை மின் நிலையம்; மின்தடை பகுதிகள்-காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை
நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், மற்றும் ராக்கியாபாளையம் பிரிவு.
பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையம்; மின்தடை பகுதிகள்-காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை
செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், பூங்கா நகர், பாலாஜிநகர், அய்யப்பா நகர்
அலகுமலை துணை மின்நிலையம்; மின்தடை பகுதிகள்-காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை
பொல்லிகாளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிப்பாளையம், கைகாட்டி, தொங் குட்டிபாளையம், கண்டியன்கோவில், மீனாட்சி வலசு, மருதுரையான்வலசு, முதியாநெரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளை யம், கரியாம்பாளையம், ஆண்டிப்பாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபு நகர், காங்கேயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வசிவரம்புதூர், கோவில்வழி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய் யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.