திருப்பூர், அவிநாசி, பல்லடம் பகுதிகளில் நாளை ( 5ம் தேதி) மின்தடை
Tirupur News,Tirupur News Today- திருப்பூர், அவிநாசி, பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில், மாதாந்திர மின்பராமரிப்பு பணிகளுக்காக, நாளை ( 5ம் தேதி) சனிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர், அவிநாசி, பல்லடம் பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை ( 5ம் தேதி) சனிக்கிழமை மின்தடை செய்யப்படுவதாக, மின்வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்
இதுகுறித்து, திருப்பூர் மின்சாரவாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வீரபாண்டி, ஆண்டிபாளையம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி மாலை 4 மணிவரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
வீரபாண்டி துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி மாலை 4 மணிவரை
வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதி நகர், நொச்சிப்பாளையம், (வாய்க்கால்மேடு குளத்துப்பாளையம், கரைப்புதூர், குப்பாண்டம்பாளையம், எம். ஏ. நகர், லட்சுமிநகர், சின்னக்கரை, முல்லைநகர், டி. கே. டி. மில்.
ஆண்டிப்பாளையம் துணை மின் நிலையம்;
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி மாலை 4 மணிவரை
இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன்புதூர், கே. என். எஸ். நகர், முல்லைநகர், இடும்பன் நகர், ஆர். கே. காட்டான் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும், எனத் தெரிவித்துள்ளார்.
அவிநாசி
இதுகுறித்து, அவிநாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அவிநாசி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நாளை ( சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை, மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
அவிநாசி மின் நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி மாலை 4 மணிவரை
அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்து செட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, வ.உ.சி. காலனி, கிழக்கு மேற்கு வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டி புதூர், சக்தி நகர், குமரன் காலனி, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
பல்லடம்
இதுகுறித்து, பல்லடம் வட்ட மின் பகிரமான செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பல்லடம் அருகேயுள்ள காளிவேலம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், நாளை (5-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது.
காளிவேலம்பட்டி துணை மின்நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி மாலை 4 மணிவரை
பல்லடம் அண்ணாநகர், மின்நகர், காளிவேலம்பட்டி, லட்சுமிமில்,பெரும்பாளி, செம்மிபாளையம், சுக்கம்பாளையம், ஊஞ்சப்பாளையம், ராசக்கவுண்டம்பாளையம், சின்னியகவுண்டம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி, ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது, எனத் தெரிவித்துள்ளார்.