திருப்பூர், தாராபுரம் பகுதிகளில் வரும் 6ம் தேதி மின்தடை

Tirupur News,Tirupur News Today- துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், வரும் 6ம் தேதி திருப்பூர் மற்றும் தாராபுரம் பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.;

Update: 2023-06-04 08:59 GMT

Tirupur News,Tirupur News Today- திருப்பூர், தாராபுரம் பகுதிகளில் வரும் 6ம் தேதி மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today-  திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு மின்சார வாரியம் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி 6-ம் தேதி நடக்கிறது. எனவே 6-ம்தேதி  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

மின்தடை பகுதிகள்

வீரபாண்டி, பாலாஜிநகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதூர், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லைநகர், டி.கே.டி.மில், இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்குப்பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன்புதூர், கே.என்.எஸ்.நகர், முல்லைநகர், இடும்பன் நகர், ஆர்.கே.காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம்நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன்நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

தாராபுரம்

தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; 

மூலனூர், கன்னிவாடி, மற்றும் கொளத்துபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்புபணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 6-ம் தேதி  காலை 9மணிமுதல் மதியம் 2மணிவரை கீழ்கண்ட பகுதிகளில், மின்விநியோகம் இருக்காது.

மின்தடை பகுதிகள்

அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டு வலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதுார், கிளாங்குண்டல், மாலமேடு, அரிக்காரன்வலசு ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள்வலசு, உப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கலூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு. கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மாரியம்மன் கோவில், சின்னக்கடைவீதி மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News