திருப்பூர் மாவட்டத்தில், நாளை (16ம் தேதி) 8 துணை மின்நிலையங்களில் மின்தடை
Tirupur News- திருப்பூர், பல்லடம், உடுமலை என மாவட்டத்தில் 8 துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில், நாளை ( 16ம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் 8 துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், நாளை சனிக்கிழமை ( 16ம் தேதி) மின்விநியோகம் தடை செய்யப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர்கள் சந்திரசேகரன், ராமச்சந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வீரபாண்டி, ஆண்டிபாளையம், சந்தைப்பேட்டை, பலவஞ்சிபாளையம், குமரன் ரோடு, குமார் நகர் துணை மின் நிலையங்களில், நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் இந்த துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை முதல் மாலை வரை இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்விநியோகம் இருக்காது.
வீரபாண்டி துணை மின்நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
வீரபாண்டி, பாலாஜிநகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதூர், குப்பாண்டம்பாளையம், எம். ஏ. நகர், லட்சுமிநகர், சின்னக்கரை, முல்லை நகர், டி. கே. டி. மில் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
ஆண்டிபாளையம் துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியக்கவுண்டன் புதூர், கே. என். எஸ். நகர், முல்லைநகர், இடும்பன் நகர், ஆர். கே. காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
சந்தைபேட்டை, பலவஞ்சிபாளையம், குமரன் ரோடு துணை மின் நிலையங்கள்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
அரண்மனைப்புதூர், தட்டான் தோட்டம், எம். ஜி. புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரிப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங் காடு. கே. எம். நகர், கே. எம். ஜி. நகர், பட்டுகோட்டையார் நகர், திரு. வி. க. நகர், கவுண்டம்பாளையம், கோபால் நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ. பி. டி. நகர், கே. வி. ஆர். நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷின் வீதி, காமராஜ் ரோடு, புது மார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
குமார்நகர் துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
ராமமூர்த்தி நகர், பி. என். ரோடு, ராமையா காலனி, பாளையக்காடு, கருமா ரம்பாளையம், சேர்மன் கந்தசாமி நகர், ரங்கநாதபுரம், ஈ. ஆர். பி. நகர், கொங்கு நகர், அப்பாச்சிநகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ். வி. காலனி, பண்டித் நகர், கொங்கு மெயின் ரோடு, வ. ஊ. சி. நகர், டி. எஸ். ஆர். லே அவுட், முத்துநகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என். ஆர். கே. புரம், வெங்கடேசபுரம், குமாரனந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள் ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலைநகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம். எஸ். நகர், புது பஸ் ஸ்டாண்ட், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது, எனத் தெரிவித்துள்ளனர்.
பல்லடம்
பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், நாளை (சனிக்கிழமை) இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
பல்லடம் துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக் கம்பட்டி, மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகர், அம்மாபாளையம், பனப்பாளையம் ஆகிய ஊர்களில் மின் வினியோகம் இருக்காது, எனத் தெரிவித்துள்ளார்.
உடுமலை
உடுமலை மின்வாரியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
உடுமலை அருகே பூலாங்கிணறு துணை மின் நிலையம் பகுதிகளில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
பூலாங்கிணறு துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
டி. எம். நகர் பீடர் உட்பட்ட மெடக்குப்பட்டி, பாப்பனூத்து, அமண சமுத்திரம் , திருமூர்த்தி நகர் பொன்னாளம்மன் சோலை ஆகிய பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.