திருப்பூர் மாவட்டத்தில் தபால் வாக்கு அளிக்கும் பணி தொடங்கவுள்ளது
திருப்பூர் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் தபால் வாக்கு அளிக்கும் பணி தொடங்கவுள்ளது
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, திருப்பூர் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகளுக்காக, தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் 3871 பேருக்கு தபால் வாக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் தெற்கு தொகுதியில் 280, திருப்பூர் வடக்கு 166, உடுமலை 771, அவிநாசி 661, தாராபுரம் 657, மடத்துக்குளம் 603, பல்லடம் 398, காங்கேயம் 335 என 3871 தபால் வாக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நுண்பார்வையாளர் தலைமையில் தேர்தல் அலுவலர், காவல்துறையினர், வீடியோ குழுவினர் அடங்கிய குழு 29 மற்றும் 31 ஆகிய வீடு வீடாக சென்று தபால் வாக்குப்பதிவு நடத்தவுள்ளது.