திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் எஸ்.ஐ எழுத்துத் தேர்வு; 2 மையங்களில் 2,479 பேர் பங்கேற்பு
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் நடந்த ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கான எஸ்.ஐ, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பதவிக்கான முதன்மை தேர்வில், மொத்தம் 2,479 பேர் எழுதினர்.;
Tirupur News,Tirupur News Today- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கான சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் பதவிக்கான முதன்மை தேர்வு, திருப்பூரில் இன்று நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் காந்திநகர் அங்கேரிப்பாளையம் ரோடு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியிலும், குமார் நகர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியிலும் இன்று காலை தேர்வு தொடங்கியது. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முதன்மை தேர்வு நடைபெற்றது. மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ்மொழி தகுதித்தேர்வு நடக்கிறது.
திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1,967 ஆண்களும், பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் 512 பெண்களும் தேர்வு எழுதுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் தேர்வு மையத்தில் நேற்று முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து தேர்வாளர்கள் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்து நின்றனர். காலை 9 மணி அளவில் 3 கட்ட சோதனைக்கு பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்தில் உரிய ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் எஸ்.பி சாமிநாதன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
இதேப்போல் ஆண்களுக்கான தேர்வு நடைபெறும் மையத்திலும் நீண்ட வரிசையில் காத்து நின்று இளைஞர்கள் தேர்வு எழுதினர். திருப்பூர் மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 479 பேர் தேர்வு எழுதினர்.