மரக்கன்றுகள் நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி!
வஞ்சிப்பாளையம் நண்பர்கள் குழு அறக்கட்டளை மற்றும் இசை உறவுகள் சார்பில் மரக்கன்றுகள் நட்டு, நடிகர் விவேக் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பல்வேறு அமைப்புகளும் பசுமைப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அவர் வலியுறுத்தி வந்தபடி, மரக்கன்றுகளை பலரும் ஆர்வமுடன் நட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, வஞ்சிப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நண்பர்கள் குழு அறக்கட்டளை மற்றும் திருப்பூர் ஆர்கெஸ்ட்ரா கூட்டமைப்பான 'இசை உறவுகள்' இணைந்து, நடிகர் விவேக் நினைவாக, அவரது கனவை நினைவாக்கும் வகையில், மரக்கன்று நடும் விழாவை நடத்தின.
அதன்படி, வஞ்சிப்பாளையம் சுற்றுப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், நடிகர் விவேக்கின் சமுதாயப்பணிகளை, உறுப்பினர்கள் நினைவு கூர்ந்தனர்.