திருப்பூர் அருகே குடிகார மகனை, கத்தியால் குத்திக் கொலை செய்த பெற்றோர் கைது
Tirupur News,Tirupur News Today- திருப்பூர், ஊத்துக்குளி அருகே பெற்ற மகனை கத்தியால் குத்திக்கொலை செய்த பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.;
Tirupur News,Tirupur News Today- நாமக்கல் மாவட்டம் துறையூரை அடுத்துள்ள குப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவருடைய மனைவி சாந்தாமணி (50). இவர்களது மகன் மணிகண்டன் (26). இவர்கள் 3 பேரும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் பகுதியில் வசித்து வந்தனர். மணிகண்டன் அப்பகுதியில் தையல் தொழிலாளியாக பணிசெய்தார்.
இந்நிலையில் நேற்று காலை, மணிகண்டன் தனது வீட்டின் முன்பு கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். அவரது உடலை பார்த்து, பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த ஊத்துக்குளி போலீசார், அந்த இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது செல்வராஜ், தனது மகனை 2 வாலிபர்கள் மோட்டார் பைக்கில் அழைத்துச்சென்று கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு, பின்னர் தங்களது வீட்டின் முன்பு, சடலத்தை கொண்டுவந்து போட்டு விட்டு சென்றதாக போலீசாரிடம் கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து சில விஷயங்களை விசாரித்த போது, செல்வராஜ் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் செல்வராஜூம், அவரது மனைவியும் சேர்ந்து, பெற்ற மகனையே கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
அவர்களது மகன் மணிகண்டன், கடந்த 10 ஆண்டுகளாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, பெற்றோரை அடிக்கடி மிரட்டியும், அவ்வப்போது அடித்தும் துன்புறுத்தி, அவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளார். மகனின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாகி விட்டதால் மன வேதனை அடைந்த செல்வராஜ், மனதை கல்லாக்கிக் கொண்டு தனது மனைவியுடன் சேர்ந்து மகனை கத்தியால் குத்திக்கொலை செய்ததும், அதனை மறைப்பதற்கு 2 வாலிபர்கள் அழைத்துச் சென்று தீர்த்துக் கட்டியதாக நாடகமாடியதும் தெரிய வந்தது.
இதன்பின்னர் இந்த கொைல தொடர்பாக போலீசார் செல்வராஜ், சாந்தாமணி இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பெற்ற மகனையே தாய், தந்தை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு, நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.