கறிக்கோழி விற்பனை ஜி.எஸ்.டி க்குள் வருமா? உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

Update: 2021-11-04 04:30 GMT

'கறிக்கோழி விற்பனையை, ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்' என உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், கறிக்கோழி உற்பத்தி தொழில் அதிகளவில் நடந்து வருகிறது. பல்லடம், கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) கொள்முதல் விலையை நிர்ணயிக்கிறது.

அதன் செயலர் சுவாதி கண்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் வாரம் 2 கோடி கிலோ கறிக்கோழிகள் உற்பத்தியாகின்றன. தீவனங்கள், நோய் தடுப்பு மருந்துகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஜி.எஸ்.டி. செலுத்தியே வாங்கி வருகிறோம். அவ்வகையில் ஆண்டுக்கு, 400 கோடி ரூபாய் வரை மத்திய அரசுக்கு செல்கிறது.

கறிக்கோழிகள் ஜி.எஸ்.டி.க்குள் இல்லாததால் அரசுக்கு செலுத்தும் கோடிக்கணக்கான ரூபாயை எங்களால் திரும்ப பெற இயலாத நிலை உள்ளது. கறிக்கோழிகளையும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர, மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் எனஅவர் கூறினார்.

Tags:    

Similar News