நின்று போன மானிய திட்டம் மீண்டும் கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு

கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மானிய திட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.;

Update: 2022-01-02 05:00 GMT

மாதிரி படம் 

உணவு உற்பத்தியை அதிகப்படுத்த விளை பொருட்களின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்த, விவசாயிகளுக்கு பல்வேறு மானிய திட்டங்கள் மத்திய, மாநில அரசுகள் மூலம் வழங்கப்படுகின்றன. வேளாண், தோட்டக்கலை, கால்நடை உள்ளிட்ட துறைகள் மூலம், விவசாயிகளுக்கான மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நோய் மற்றும் பூச்சி தாக்குதல், இயற்கை சீற்றத்தால் ஏற்படும் நஷ்டம், அரசு வழங்கும் மானிய திட்டம் மூலம், ஓரளவு பாதிப்பு தவிர்க்கப்படுகிறது.

கடந்த ஆட்சியில், உழவு மானியம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டது. படைப்புழுவை கட்டுப்படுத்தும் நோக்கில், மக்காச்சோளம் அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு, 'டெலிகேட்' மருந்து நுாறு சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது. வெங்காயம், தக்காளி, மிளகாய் உள்ளிட்ட நாற்றுகளுக்கும், மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கும், பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வந்தன. இவை, தற்போது வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் , பழைய மானிய திட்டங்கள் தொடருமா என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர், 

இது  குறித்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் ஆட்சி மாறிய பின், பழைய திட்டங்களை தொடர்வற்கான உத்தரவு இன்னும் வரவில்லை. தற்போதைய அரசு, புதிய திட்டங்களை கொண்டு வர வாய்ப்பு உள்ளதால், பழைய திட்டங்கள் நிலுவையில் உள்ளன என்றார்

Tags:    

Similar News