கிராம நிர்வாக அலுவலர் சங்க தேர்தல்
பல்லடத்தில் நடந்த கிராம நிர்வாக அலுவலர் சங்க தேர்தல் நடந்தது.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில தேர்தல், பல்லடத்தில் நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலராக, கரூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க உறுப்பினர் பாலசுப்பிரமணி செயல்பட்டார். மாநில தலைவர், துணை தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.
கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தில், திருப்பூர் மாவட்டத்தில், 236 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 206 பேர் வாக்களித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் ஓட்டுப்பெட்டி 'சீல்' வைக்கப்பட்டு, மாலை 6.00 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.