பாமாயில் இறக்குமதி ஒப்பந்தத்தை, தமிழக அரசு கைவிட உழவர் உழைப்பாளர் கட்சி கோரிக்கை
Tirupur News. Tirupur News Today- பாமாயில் இறக்குமதி ஒப்பந்தத்தை, தமிழக அரசு கைவிட வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் செல்லமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
Tirupur News. Tirupur News Today- பாமாயில் இறக்குமதி ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் செல்லமுத்து கோிக்கை விடுத்துள்ளார்.
பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம், சமீபத்தில் 200 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை வெளியிட்டதாக தெரிய வருகிறது. தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. கொப்பரைக்கும் உரிய விலை கிடைப்பதில்லை. எனவே நீண்ட காலமாக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
சமீபத்தில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இது, தென்னை விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஆறுதலை அளித்தது. கொப்பரைக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், இதன்மூலம் தென்னை விவசாயத்தில் வருவாய் கிடைக்கும் என, விவசாயிகள் கருதினர்.
இந்நிலையில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இந்த பாமாயில் ஒப்பந்த புள்ளி அறிவிப்பு விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. தென்னை விவசாயிகளை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு அரசு பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் உரம், இடுபொருட்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது உழவர் உழைப்பாளர் கட்சி முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.