பல்லடம் பகுதியில் அச்சுறுத்தும் தெருநாய்கள்: பொதுமக்கள் பீதி

பல்லடம் பகுதி தெருக்களில் அச்சுறுத்தும் நாய்களால், மக்கள் நடமாட அஞ்சுகின்றனர்.

Update: 2022-01-15 05:45 GMT

பல்லடம் நகர வீதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்கள்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வார்டுகளில், தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்லடம் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், சராசரியாக, தினசரி, 10 பேர் வீதம் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர்.

ஒவ்வொரு வீதியிலும், பத்துக்கும் குறையாமல் தெருநாய்கள் உள்ளன. இவை அவ்வப்போது கூட்டமாக அணிவகுத்தபடி, வீதிகளில் உலா வருகின்றன. அவ்வப்போது, ஒன்றோடொன்று சண்டையிட்டு கொள்வதுடன், பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. வீதிகளில் விளையாடும் சிறுவர்கள், கடைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டோர் நாய்களின் அச்சுறுத்தலால் பீதி அடைகின்றனர்.

நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'தெரு நாய்களை பிடித்துச் செல்லவோ, அல்லது கொல்லவோ அனுமதி கிடையாது. இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்,' என்றனர்.

Similar News