பல்லடம் அருகே தென்னிந்திய தென்னை திருவிழா
Tirupur News- பல்லடம் அருகே குப்புசாமிநாயுடுபுரத்தில் தென்னிந்திய தென்னை திருவிழா நடைபெற்றது.
Tirupur News,Tirupur News Today- பல்லடம் அருகே குப்புசாமிநாயுடுபுரத்தில் ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சாா்பில் தென்னிந்திய தென்னை திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
திருப்பூா் மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா் விழாவை தொடங்கிவைத்து பேசியதாவது:
தமிழ்நாட்டின் முன்னோடி மாநகராட்சியாக திருப்பூா் மாநகராட்சியை மாற்றுவதற்காக ஏராளமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் முத்தாய்ப்பாக திருப்பூரை பசுமை மாநகராட்சியாக மாற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம், என்றாா்.
தமிழக உழவா் நலச் சங்கத்தின் தலைவா் கு.செல்லமுத்து பேசியதாவது,
தென்னை விவசாயத்தை பொருத்தவரை வியாபாரிகளும், இடைதரகா்களும்தான் அதிக லாபம் பெறுகின்றனா். இந்த நிலையை மாற்றி விவசாயிகளும் அதிக லாபம் பெறுவது எப்படி என தெரிந்து கொள்ள ஈஷாவின் இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக இருக்கும். அரசு வெளிநாட்டில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்து மானிய விலையில் மக்களுக்கு விநியோகிக்கிறது. அதேபோல தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேங்காய் எண்ணெயையும் அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்றாா்.
விழாவில் வனம் இந்தியா அறக்கட்டளை செயலாளா் ஸ்கை சுந்தரராஜன் பேசினாா்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனா்.
இந்த விழாவில், தென்னை மற்றும் பிற விவசாயப் பொருள்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மதிப்புகூட்டப்பட்ட பொருள்களின் விற்பனையும், எளிய நவீன வேளாண் கருவிகளின் கண்காட்சியும் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற விவசாயிகளும், பொதுமக்களும் அங்கிருந்தவற்றை பார்வையிட்டு பல பொருட்களை ஆர்வமாக வாங்கினர்.