பல்லடம் கருவூலத்தில் கொள்ளை முயற்சி - பரபரப்பு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கருவூல அலுவலகத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2021-11-09 01:15 GMT

கொள்ளை முயற்சி நடந்த பல்லடம் கருவூலத்தில் காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டனர். 

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பேருந்து நிறுத்தம் அருகே, அரசு கருவூல அலுவலகம் உள்ளது. தீபாவளி விடுமுறை முடிந்து, கருவூல அதிகாரிகள், அலுவலர்கள் பணிக்கு வழக்கம் போல் திரும்பினர். அப்போது, அலுவலகத்தின் பிரதான கதவு, லாக்கர், பீரோ உடைக்கப்பட்டிருந்தன.

அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பணம் எதுவும் திருடு போகவில்லை என தெரிவித்தனர். இது குறித்து, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News