ஓய்வெடுக்கும் விசைத்தறிகள்: தொழிலாளர்களுக்கு காத்திருப்பு

சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களால், விசைத்தறி காடா துணி உற்பத்தியின் வேகம் குறைந்துள்ளது.

Update: 2021-11-07 04:00 GMT

பல்லடத்தில் மூடப்பட்ட விசைத்தறி கூடங்கள்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் உள்ளன. தினமும், ஒரு கோடி மீட்டர் அளவுக்கு, காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதால், விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், காடா உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூறுகையில்,'கடந்தாண்டு, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, பெரும்பாலான விவசாயிகள் சொந்த ஊர் செல்லவில்லை. நடப்பாண்டு, தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், தீபாவளி பண்டிகையை கொண்டாட பலரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். தொழிலாளர்கள் மீண்டும் வந்த பிறகு தான், உற்பத்தி துவங்கும்,' என்றனர்.

Tags:    

Similar News