கொள்முதல் விலை குறைவு: விவசாயிகள் கவலை

படைப்புழுக்கள் கட்டுக்குள் வந்த நிலையில் கொள்முதல் விலை கட்டுப்படியாகவில்லை என, மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

Update: 2022-01-03 09:45 GMT

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாரத்தில், 1,200 எக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட படைபுழு தாக்கம் காரணமாக, விவசாயிகள் பலர் நஷ்டத்தை சந்தித்தனர். தமிழக அரசு 'டெலிகேட்' மருந்தை மானிய விலையில் வழங்கி, படைப்புழுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக, புழுக்களின் தாக்குதல் பெருமளவில் குறைந்தது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், கொள்முதல் விலை குறைந்திருப்பதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் சிலர் கூறியதாவது:

ஏக்கருக்கு, 25 முதல் 30 குவின்டால் வரை மகசூல் கிடைக்கும். அக்டோபர் மாதம் நடவு செய்யப்பட்டு, பொங்கல் முடிந்து அறுவடைக்கு வரும். சில மாதங்களுக்கு முன், குவின்டால் 2,200 ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, 1,700 ரூபாயாக குறைந்துள்ளது. குவின்டால், 2,000 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே விலை கட்டுப்படியாகும். படைப்புழு பாதிப்பு குறைந்த நிலையில், கட்டுப்படியாகாத விலை கவலை அளிக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News