சான்று வழங்க இழுத்தடிப்பு: கிராம மக்கள் தர்ணா

சான்று வழங்க இழுத்தடிப்பதாக கூறி, பல்லடம் தாலுகா அலுவலகத்தில், கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.;

Update: 2022-03-26 05:00 GMT

தர்ணாவில் ஈடுபட்ட கிராம மக்கள்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, பொங்கலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருடமுத்துார் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர், பல்லடம் தாலுகா அலுவலகம் வந்து, திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறுகையில், 'வடமலைபாளையம் கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி பட்டா, சாதி சான்று வழங்க லஞ்சம் கேட்கிறார். லஞ்சம் தருபவர்களுக்கு மட்டும் வேலைகளை உடனுக்குடன் முடித்து தருகிறார். சாதி சான்று வழங்க மூன்று ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய துணை தாசில்தார் சந்திரசேகர் கூறுகையில், 'சமீபத்திலும் சாதி சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆவணங்கள் முறையாக இல்லாததால் சாதி சான்று வழங்கப்படவில்லை. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டபின் உடனடியாக சான்று வழங்கப்படும். வி.ஏ.ஓ., மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும்'' என்றார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News