விசைத்தறி உரிமையாளர் கடையடைப்பு

விசைத்தறி உரிமையாளர்கள் இன்று நடத்தும் கடையடைப்பு போராட்டத்துக்கு, வியாபாரிகள், விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு அளித்துள்ளது.

Update: 2022-02-24 15:15 GMT

பைல் படம்.

விசைத்தறி உரிமையாளர்கள் இன்று நடத்தும் கடையடைப்பு போராட்டத்துக்கு, வியாபாரிகள், விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு அளித்துள்ளது. உண்ணாவிரத போராட்டத்துக்கு, சோமனூர் விசைத்தறி சங்க தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். ஒப்பந்த கூலி உயர்வை வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சோமனூர் ரகத்துக்கு, 19, இதர ரகத்துக்கு, 15 சதவீத கூலி உயர்வு வழங்குவது என, சமீபத்தில் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் தீர்மானிக்கப்பட்டது. பல்லடம் உட்பட நான்கு சங்கங்கள் இதை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றன.

சோமனூர் உள்ளிட்ட ஐந்து சங்கங்கள், கையெழுத்து வடிவில் கூலி உயர்வு ஒப்பந்தத்தை வழங்க வலியுறுத்தி, 48வது நாளாக வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வருகின்றன. பல்லடம் அடுத்த காரணம் பேட்டையில், விசைத்தறி உரிமையாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News