வரும் 25ல் பல்லடத்தில் விசைத்தறித் தொழில் மேம்பாட்டு கருத்தரங்கம்
Tirupur News- பல்லடத்தில் வரும் 25ம் தேதி விசைத்தறித் தொழில் மேம்பாட்டு கருத்தரங்கம் நடக்கிறது.;
Tirupur News,Tirupur News Today- விசைத்தறித் தொழிலில் ஈடுபட்டுள்ள இளைஞா்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் பல்லடத்தில் விசைத்தறித் தொழில் மேம்பாட்டு கருத்தரங்கம் வரும் டிசம்பா் 25-ம் தேதி ( திங்கள்கிழமை) நடைபெறவுள்ளது.
இது குறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்க செயலாளா் அப்புக்குட்டி என்ற பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் வருங்காலத்தில் ஏராளமான வாய்ப்புகளையும், அபரிமிதமான வளா்ச்சி விகிதத்தையும் கொண்டதாக இருக்கும் என்று வா்த்தக நிபுணா்கள் கணித்துள்ளனனா்.
இளைஞா்கள், தங்களது ஆற்றலையும், தொழில்நுட்ப அறிவையும் முழுமையாகவும், முறையாகவும் பயன்படுத்தினால் இன்றைக்கு சந்தித்து வரும் சவாலான சூழ்நிலைகளிலிருந்து மீண்டெழுந்து விசைத்தறித் தொழிலை அடுத்தகட்ட வளா்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் செல்லலாம்.
இதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் விசைத்தறி தொழில் மேம்பாட்டு கருத்தரங்கம் பல்லடம் - கோவை சாலையில் அமைந்துள்ள அண்ணா நகா் ராஜகீய உணவகத்தின் பாா்ட்டி ஹாலில் வரும் டிசம்பா் 25-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில், சென்னையைச் சோ்ந்த தொழில் ஆலோசகா் எம்.கே.ஆனந்த், கோவையைச் சோ்ந்த ஜவுளித் துறை வல்லுநா் முரளீதரன் ஆகியோா் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்க உள்ளனா்.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு விசைத்தறித் தொழிலை மிகுந்த நம்பிக்கையுடன் செய்து வரும் இளம் விசைத்தறியாளா்களை கேட்டுக்கொள்கிறோம், என தெரிவித்துள்ளார்.