பொங்கலூரில் நாளை மின்தடை

Tirupur News,Tirupur News Today- பொங்கலூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடக்க இருப்பதால், நாளை 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை ) மின்சார விநியோகம் இருக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-08-24 14:45 GMT

Tirupur News,Tirupur News Today- பொங்கலூரில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. (கோப்பு படங்கள்)

Tirupur News,Tirupur News Today- பொங்கலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால், நாளை மின்விநியோகம் இருக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கலூா் துணை மின் நிலையத்தில், நாளை  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே,  நாளை 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்;காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

பொங்கலூா், காட்டூா், தொட்டம்பட்டி, மாதப்பூா், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிக்காளிபாளையம், கண்டியன்கோவில், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூா், என்.என்.புதூா், வடக்கு அவிநாசிபாளையம், எல்லப்பாளையம்புதூா் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட காங்கேயம்பாளையம், ஒலப்பாளையம் ஆகிய பகுதிகளில், மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News